Loading...
Language: Tamil
اَللَّهُ لَآ إِلٰهَ إِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُۥ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِى يَشْفَعُ عِنْدَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِىُّ الْعَظِيمُ
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் லா தஃகுதுஹு ஸினதுன் வலா நவ்ம் லஹு மா ஃபிஸ் ஸமாவாதி வமா ஃபில் அர்ழி மன் தல்லதீ யஷ்ஃபஃ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மா பைன அய்தீஹிம் வமா கல்ஃஃபஹும் வலா யுஹீதூன பிஷையிம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஃ வஸிஃ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ழ் வலா யஊதுஹு ஹிஃஃளுஹுமா வ ஹுவல் அலிய்யுல் அஜீம்
அல்லாஹ்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, நித்தியமானவன், யாவற்றையும் காப்பவன். அவனுக்கு தூக்கமும் இல்லை உறக்கமும் இல்லை. வானங்களிலுள்ளதும் பூமியிலுள்ளதும் அவனுக்கே உரியது. அவனுடைய அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? அவர்களுக்கு முன்னால் உள்ளதையும் பின்னால் உள்ளதையும் அவன் அறிவான். அவன் நாடுவதைத் தவிர அவனுடைய ஞானத்திலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்துகொள்ள முடியாது. அவனுடைய குர்ஸி வானங்களையும் பூமியையும் தழுவி நிற்கிறது. அவற்றை பாதுகாப்பது அவனுக்கு கடினமாக இல்லை. அவன் மிகவும் உயர்ந்தவன், மிகவும் மகத்தானவன். (ஸூரா பகரா 2:255) யார் படுக்கப் போகும்போது ஆயத்துல் குர்ஸி படிக்கிறாரோ, அவரிடம் அல்லாஹ்விடமிருந்து ஒரு காவலாளி இருப்பான், காலை விடியும் வரை ஷைத்தான் அவரை அண்டவே மாட்டான்.
Reference: புகாரி, ஃபத்ஹுல் பாரி 4/487, எண் 2311