Loading...
Language: Tamil
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒரு கூட்டத்தில் நூறு முறை இந்த துஆவை சொல்வார்கள் என்று நாங்கள் எண்ணிக்கை பிடித்தோம்:
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
ரப்பிக்பிர்லீ வ துப் அலய்ய இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்
யா அல்லாஹ்! என்னை மன்னித்து என் தவ்பாவை ஏற்றுக்கொள், நிச்சயமாக நீ தவ்பாவை ஏற்கக்கூடியவன், மிக்க அன்புடையவன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 1516