Loading...
Language: Tamil
உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தனது வீட்டை விட்டு வெளியேறும்போது இவ்வாறு சொல்வார்கள்:
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اَللَّـهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا
பிஸ்மில்லாஹி, தவக்கல்து அலல்லாஹி. அல்லாஹும்ம, இன்னா நஃஊது பிக மின் அன் நஸில்ல அவ் நதில்ல, அவ் நஸ்லிம அவ் நுஸ்லம, அவ் நஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைனா
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கிறேன். யா அல்லாஹ்! நாங்கள் தவறுதலாக வழுக்கி விழுவதிலிருந்து அல்லது வழிகெட்டு போவதிலிருந்து, அல்லது அக்கிரமம் செய்வதிலிருந்து அல்லது அக்கிரமத்திற்கு ஆளாவதிலிருந்து, அல்லது அறியாமையில் செயல்படுவதிலிருந்து அல்லது நம்மீது அறியாமையாக நடந்துகொள்வதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகிறோம். ஒரு முஃமின் பகல் அல்லது இரவு எப்போது வெளியே செல்லும்போதும் இந்த திக்ரை இதயத்தினால் ஓத வேண்டும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 3427