Loading...
Language: Tamil
உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) கூறினார்: ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் வானத்தை நோக்கி இந்த வார்த்தைகளை ஓதுவார்கள்:
اَللَّـهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ
அல்லாஹும்ம இன்னீ அஃஊது பிக அன் அதில்ல அவ் உதல்ல, அவ் அஸில்ல அவ் உஸல்ல, அவ் அஸ்லிம அவ் உஸ்லம, அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்யா
யா அல்லாஹ்! நான் வழிகெட்டு போவதிலிருந்து அல்லது வழிகெடுக்கப்படுவதிலிருந்து, தவறுதலாக வழுக்குவதிலிருந்து அல்லது வழுக்க வைக்கப்படுவதிலிருந்து, அக்கிரமம் செய்வதிலிருந்து அல்லது அக்கிரமத்திற்கு ஆளாவதிலிருந்து, அறியாமையாக நடந்துகொள்வதிலிருந்து அல்லது என்னிடம் அறியாமையாக நடந்துகொள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 5094