Loading...
Language: Tamil
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கழிப்பறைக்குள் நுழையும்போது இவ்வாறு சொல்வார்கள்:
بِسْمِ اللَّهِ، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஃஊது பிக மினல் குபுஸி வல்கபாயிஸ்
அல்லாஹ்வின் பெயரால். யா அல்லாஹ்! அசுத்தமான ஆண் மற்றும் பெண் ஜின்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன். அலி (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: உங்களில் யாரேனும் இயற்கை உபாதைக்காக தனிமையான இடத்திற்கு சென்றால், ஆதம் மக்களின் மறைவிடங்களை ஜின்களின் கண்களிலிருந்து மறைக்கும் பாதுகாப்பு பிஸ்மில்லாஹ் சொல்வதாகும்.
Reference: புகாரி: 142