Loading...
Language: Tamil
உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: முஅத்தின் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்லும்போது, உங்களில் யாரேனும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொன்னால்; முஅத்தின் அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லும்போது, அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால்; முஅத்தின் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்லும்போது, அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொன்னால்; முஅத்தின் ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று சொல்லும்போது, லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று சொன்னால்; முஅத்தின் ஹய்ய அலல்ஃபலாஹ் என்று சொல்லும்போது, லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று சொன்னால்; முஅத்தின் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்லும்போது, அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொன்னால்; முஅத்தின் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லும்போது, லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால்; இவற்றை இதயத்திலிருந்து சொன்னால் அவர் ஜன்னத்தில் நுழைவார்.
Reference: முஸ்லிம்: 385