Loading...
Language: Tamil
முஅத்தின் தஷஹ்ஹுத் (அஷ்ஹது அன்ன முஹம்மதர்...) சொன்னதும் கேட்பவர்கள் இந்த திக்ரை சொல்வார்கள்:
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹூ, ரதீது பில்லாஹி ரப்பன் வ பிமுஹம்மதின் ரஸூலன் வ பில்இஸ்லாமி தீனன்
அல்லாஹ்வைத் தவிர வேறு இலாஹ் இல்லை என்றும், அவன் தனியே, இணையற்றவன் என்றும், முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவரது அடியாரும் தூதரும் என்றும் சாட்சியமிடுகிறேன். அல்லாஹ்வை ரப்பாகவும், முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ரஸூலாகவும், இஸ்லாத்தை தீனாகவும் ஏற்றுக்கொண்டதில் திருப்தி அடைகிறேன். ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: முஅத்தினை கேட்டு இந்த வார்த்தைகளை யார் சொல்கிறார்களோ, அவர்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும்.
Reference: முஸ்லிம்: 386