Loading...
Language: Tamil
ஷகீக் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: ஹுதைஃஃபா (ரழியல்லாஹு அன்ஹு) ருகூவும் ஸுஜூதும் சரியாக செய்யாத ஒருவரை கண்டு அவரிடம் கூறினார்: நீ நமாஸ் செய்யவில்லை, நீ இறந்தால் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மார்க்கமல்லாத ஒரு மார்க்கத்தின் மேல் இறப்பாய். [1] கதாதா (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: மிக மோசமான திருடன் ஸலாஹை திருடுபவன். ஸஹாபாக்கள் கேட்டார்கள்: ஸலாஹை எவ்வாறு திருடுவது? நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: ருகூவையும் ஸுஜூதையும் முழுமையாக செய்யாதவன். [2]
Reference: [1] புகாரி: 791 [2] ஸஹீஹ் (அல்பானி). மிஷ்காத்: 885