Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பேரிடரின் கடினமான தருணங்களிலிருந்தும், அழிவால் மூழ்கடிக்கப்படுவதிலிருந்தும், தீய முடிவிற்கு விதிக்கப்படுவதிலிருந்தும், எதிரிகளின் தீய மகிழ்ச்சியிலிருந்தும் அல்லாஹ்வின் அடைக்கலம் தேடுவார்கள்.
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி, வல் அஜ்ஸி வல் கஸலி, வல் புக்லி வல் ஜுப்னி, வ தலாஃஈத் தயனி வ கலபதிர் ரிஜால்
யா அல்லாஹ்! கவலையிலிருந்தும் சோகத்திலிருந்தும், பலவீனத்திலிருந்தும் சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும், கடனால் மூழ்கடிக்கப்படுவதிலிருந்தும் மனிதர்களால் (மற்றவர்களால்) அடிமைப்படுத்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன்.
Reference: புகாரி: 2893