Loading...
Language: Tamil
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: ருகூவிலும் ஸுஜூதிலும் குர்ஆன் ஓதுவது எனக்கு தடுக்கப்பட்டுள்ளது. ருகூவில் அல்லாஹ்வின் மகிமையை புகழுங்கள். ஸுஜூதில் அதிகமாக துஆ செய்யுங்கள். ஸுஜூத் உங்கள் துஆவை ஏற்றுக்கொள்வதற்கு உகந்த இடமாகும். மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களிலிருந்து தெளிவாகிறது: ஸுஜூதில் இருக்கும்போது அதிகமாக துஆ செய்யவேண்டும். இந்த நிலையில் துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே குர்ஆனிய துஆக்களைத் தவிர ஸஹீஹான ஹதீஸ்களில் குறிப்பிட்ட எந்த துஆவையும் செய்யலாம். ஏனெனில் ருகூவிலும் ஸுஜூதிலும் குர்ஆனிய துஆவால் இறைஞ்சுவது தடுக்கப்பட்டுள்ளது.
Reference: முஸ்லிம்: 479