Loading...
Language: Tamil
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறினார்: ஒரு இரவு படுக்கையில் ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை காணவில்லை. (இருட்டில்) தேடினேன். என் கை அவர்களின் உள்ளங்காலை தொட்டது. அவர்கள் ஸுஜூதில் இருந்தார்கள், கால்கள் நிமிர்ந்திருந்தன. அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوْذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிரிதாக மின் ஸகதிக, வ பிமுஆஃஃFாதிக மின் உக்கூபதிக வ அஊது பிக மிங்க, லா உஹ்ஸீ தனாஃன் அலைக, அன்த கமா அத்னைத அலா நஃஃFஸிக
யா அல்லாஹ்! உன் கோபத்திலிருந்து உன் திருப்தியில் பாதுகாப்பு தேடுகிறேன், உன் தண்டனையிலிருந்து உன் மன்னிப்பில் பாதுகாப்பு தேடுகிறேன். உன்னிடமிருந்து உன்னிடமே பாதுகாப்பு தேடுகிறேன். உன் புகழை எண்ண என்னால் முடியாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்தாயோ அவ்வாறே இருக்கிறாய்.
Reference: முஸ்லிம்: 486, ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 3566