Loading...
Language: Tamil
ரஸூலுல்லாஹ் (ﷺ) தஷஹ்ஹுதிற்கும் ஸலாமுக்கும் இடையில் தொழுகையின் இறுதியில் இந்த வார்த்தைகளை சொல்வார்கள்:
اَللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்மக்பிர் லீ மா கத்தம்து, வ மா அக்கர்து, வ மா அஸ்ரர்து, வ மா அஃலன்து, வ மா அஸ்ரஃப்து, வ மா அன்த அஃலமு பிஹி மின்னீ. அன்தல் முகத்திமு, வ அன்தல் முவக்கிரு லா இலாஹ இல்லா அன்த
யா அல்லாஹ், முன்பு செய்ததையும் பின்பு செய்வதையும், மறைத்ததையும் வெளிப்படுத்தியதையும், வரம்பு மீறியதையும், என்னைவிட நீ அதிகமாக அறிவதையும் மன்னிப்பாயாக. நீயே முன்நிறுத்துபவன், நீயே பின்வைப்பவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. தஷஹ்ஹுதிற்குப் பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ﷺ) ஸலாம் சொல்வதற்கு முன் இறுதியில் இந்த துஆவை செய்வார்கள்.
Reference: முஸ்லிம்: 771