Loading...
Language: Tamil
நபி (ﷺ) ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் பிறகு இந்த துஆ சொல்வார்கள்:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِىَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர், அல்லாஹும்ம லா மானிஃ லிமா அஃதைத, வ லா முஃதிய லிமா மனஃத வ லா யன்ஃபஃ தல் ஜத்தி மின்கல் ஜத்து
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் ஒருவனே, அவனுக்கு இணை எவருமில்லை, ஆட்சியனைத்தும் அவனுக்கே, புகழனைத்தும் அவனுக்கே, அவன் அனைத்தின்மீதும் வல்லமையுடையவன். யா அல்லாஹ், நீ தருவதை யாரும் தடுக்க முடியாது, நீ தடுப்பதை யாரும் தர முடியாது, பெரும் செல்வம் படைத்தவனின் செல்வம் கூட உன்னுடன் அவனுக்கு பயன்படாது.
Reference: புகாரி: 844