Loading...
Language: Tamil
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்த வார்த்தைகளுடன் துஆ செய்வார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، اَللَّهُمَّ اغْسِلْ قَلْبِي بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ. اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ
அல்லாஹும்ம இன்னீ அஃ ஊதுபிக மின் ஃபித்னதின்-னார், வ அதாபின்-னார், வ ஃபித்னதில்-கப்ர், வ அதாபில்-கப்ர், வ ஷர்ரி ஃபித்னதில்-கினா, வ ஷர்ரி ஃபித்னதில்-ஃபக்ர், அல்லாஹும்ம இன்னீ அஃ ஊதுபிக மின் ஃபித்னதில்-மஸீஹித்-தஜ்ஜால். அல்லாஹும்மக்ஸில் கல்பீ பி-மாஃ இஸ்-ஸல்ஜி வல்-பரத், வ நக்கி கல்பீ மினல்-கதாயா கமா நக்கைதஸ்-ஸவ்பல்-அப்யத மினத்-தனஸ், வ பஃ இத் பைனீ வ பைன கதாயாய கமா பாஃ அத்த பைனல்-மஷ்ரிகி வல் மக்ரிப், அல்லாஹும்ம இன்னீ அஃ ஊதுபிக மின் அல்-கஸலி வல்-ஹரமி வல்-மஃ ஸமி வல்-மக்ரம்
யா அல்லாஹ்! நரகின் சோதனையிலிருந்தும், நரகின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், கப்ரின் சோதனையிலிருந்தும், கப்ரின் சோதனையின் தீமையிலிருந்தும், செல்வத்தின் சோதனையின் தீமைகளிலிருந்தும், வறுமையின் சோதனையின் தீமைகளிலிருந்தும், கள்ள மஸீஹின் சோதனையின் தீமையிலிருந்தும் உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன். யா அல்லாஹ்! பனி மற்றும் ஆலங்கட்டி மழை நீரால் என் பாவங்களை கழுவுவாயாக, வெள்ளை ஆடையை அழுக்கிலிருந்து சுத்தப்படுத்தியது போல் என் இதயத்தை பாவங்களிலிருந்து சுத்தப்படுத்துவாயாக, கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ள தூரம் போல் என்னுக்கும் என் பாவங்களுக்கும் இடையில் தூரத்தை ஏற்படுத்துவாயாக. யா அல்லாஹ்! சோம்பல், முதுமையின் பலவீனம், பாவம் மற்றும் கடனிலிருந்து உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ். திர்மிதி: 3495