Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) மீன் வயிற்றில் இருந்தபோது இவ்வாறு துஆ செய்தார்கள்:
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினஸ் ஸாலிமீன்.
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. நீ தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். எனவே, எந்த ஒரு முஸ்லிமும் எந்த காரியத்திற்காக இந்த துஆவால் துஆ செய்தாலும் அல்லாஹ் அவருக்கு பதிலளிக்காமல் இருப்பதில்லை.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதீ: 3505