Loading...
Language: Tamil
உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அபூ ஸலமா (ரழியல்லாஹு அன்ஹு) இறந்தபோது வந்தார்கள். அவரின் கண்கள் திறந்தே இருந்தன. அவற்றை மூடிவிட்டு கூறினார்கள்: உயிர் எடுக்கப்படும்போது பார்வை அதனைப் பின்தொடர்கிறது. அவரது குடும்பத்தினரில் சிலர் அழுது புலம்பினர். அவர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: உங்களுக்காக நன்மை அல்லாத வேறு எதையும் துஆ செய்யாதீர்கள், ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ஆமீன் சொல்கிறார்கள்.
Reference: முஸ்லிம்: 920