Loading...
Language: Tamil
உமர் இப்னு அபீ ஸலமா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: நான் அல்லாஹ்வின் தூதரின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பராமரிப்பில் இருந்த சிறுவனாவேன். சாப்பிடும்போது பாத்திரத்தின் வெவ்வேறு இடங்களில் கைகளை வைப்பேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்னிடம் கூறினார்: 'சிறுவனே! பிஸ்மில்லாஹ் சொல், வலது கையால் சாப்பிடு, உன் அருகில் இருப்பதிலிருந்து சாப்பிடு.' அதன் பிறகு இந்த முறையையே பின்பற்றுவேன்.
Reference: புகாரி: 5376