Loading...
Language: Tamil
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்: (வறட்சியால்) சில மக்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அழுதுகொண்டு வந்தார்கள். பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு சொன்னார்கள்:
اَللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيْثًا مَرِيْئًا مَرِيْعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ
அல்லாஹும்ம அஸ்கினா கைதன் முஃகீதன் மரீஆன் மரீஃன், நாஃபிஃன் கைர தாரின், ஆஜிலன் கைர ஆஜில்
யா அல்லாஹ், எங்களுக்கு ஏராளமான மழையை அருள்வாயாக, நன்மை தரும், தீமை செய்யாத, விரைவான, தாமதமில்லாத மழையை அருள்வாயாக. விரைவிலேயே வானம் மேகமூட்டமடைந்தது.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 1169