Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இரவில் விழிக்கும் நபர் இந்த வார்த்தைகளை சொல்கிறார் -
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ. اَلْحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்துலில்லாஹ் வ ஸுப்ஹானல்லாஹ் வ லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வ லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் ஒருவனே, அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது, புகழனைத்தும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் வல்லவன். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. மகிமையனைத்தும் அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வின் உதவியின்றி எந்த வலிமையும் திறனும் இல்லை. பின்னர் கூறுகிறார்: யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாய். அல்லது (அல்லாஹ்விடம்) வேண்டுகிறார், அவருக்கு பதில் கிடைக்கும், அவர் உழு செய்து (தொழுதால்), அவரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்.
Reference: புகாரி: 1154