Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறுவார்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، اَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا
அல்லாஹும்ம இன்னீ அஊஜு பிக மினல் அஜ்ஜி வல் கஸலி, வல் ஜுப்னி வல் புக்லி, வல் ஹரமி வ அஜாபில் கப்ர், அல்லாஹும்ம ஆதி நஃப்ஸீ தக்வாஹா வ ஜக்கிஹா அன்த ஹைரு மன் ஜக்காஹா அன்த வலிய்யுஹா வ மவ்லாஹா, அல்லாஹும்ம இன்னீ அஊஜு பிக மின் இல்மின் லா யன்ஃஃபஃ, வ மின் கல்பின் லா யஹ்ஷஃ, வ மின் நஃப்ஸின் லா தஷ்பஃ, வ மின் தஃவதின் லா யுஸ்தஜாபு லஹா.
அல்லாஹ்வே! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை மற்றும் கல்லறையின் வேதனையிலிருந்து உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன். அல்லாஹ்வே! என் ஆத்மாவிற்கு இறையஞ்சுதலை அளிப்பாயாக; அதை தூய்மைப்படுத்துவாயாக; நிச்சயமாக நீயே அதை மிகவும் நன்றாக தூய்மைப்படுத்துபவன்; நீயே அதன் பாதுகாவலனும் எஜமானுமாவாய். அல்லாஹ்வே! பயன்படாத அறிவிலிருந்தும், [அல்லாஹ்வை] அஞ்சாத இதயத்திலிருந்தும், திருப்தியடையாத ஆத்மாவிலிருந்தும், பதில் தரப்படாத துஆவிலிருந்தும் உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன்.
Reference: முஸ்லிம்: 2722