Loading...
Language: Tamil
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் ﷺ துன்பகரமான நேரத்தில் கூறுவார்:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
லா இலாஹ இல்லல்லாஹுல் அஜீமுல் ஹலீம் லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அஜீம், லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாதி வ ரப்புல் அர்ஜி, வ ரப்புல் அர்ஷில் கரீம்.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை, மிகவும் வல்லமையுடையவன், மிகவும் பொறுமையுடையவன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை, மகத்தான அர்ஷின் இரட்சகன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை, வானங்களின் இரட்சகன், பூமியின் இரட்சகன், கவுரவமான அர்ஷின் இரட்சகன்.
Reference: புகாரி: 6346