Loading...
Language: Tamil
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறுவதை கேட்டேன்: ஆதம் மக்களின் அனைத்து இதயங்களும் அர்-ரஹ்மானின் இரண்டு விரல்களுக்கு இடையில் ஒரே இதயமாக உள்ளன. அவன் விரும்பும் திசையில் திருப்புகிறான். பிறகு அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்:
اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
அல்லாஹும்ம முஸர்ரிஃஃபல் குலூபி, ஸர்ரிஃப் குலூபனா அலா தாஃஆதிக.
அல்லாஹ்வே! இதயங்களை திருப்புபவனே! எங்கள் இதயங்களை உமக்கு கீழ்படிவதை நோக்கி திருப்புவாயாக.
Reference: முஸ்லிம்: 2655