Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு துஆ செய்வார்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوْذُ بِكَ مِنَ التَّرَدِّيْ وَأَعُوْذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوْذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ فِي سَبِيْلِكَ مُدْبِرًا وَأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ لَدِيْغًا
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல்ஹத்மி, வ அஊது பிக மினத்தரத்தீ, வ அஊது பிக மினல்ஃகரகி, வல்ஹரகி வல்ஹரமி, வ அஊது பிக அன் யதகப்பதனியஷ்ஷைத்தானு இந்தல்மவ்தி, வ அஊது பிக அன் அமூத ஃபீ ஸபீலிக முத்பிரன், வ அஊது பிக மின் அன் அமூத லதீஃகன்
யா அல்லாஹ்! [கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும்] மரணத்திலிருந்து உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன், உயரத்திலிருந்து விழுவதால் ஏற்படும் மரணத்திலிருந்து உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன், நீரில் மூழ்கி மரணிப்பதிலிருந்தும், [நெருப்பில்] எரிந்து மரணிப்பதிலிருந்தும், முதுமையான பலகீனமான நிலையிலிருந்தும் உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னை ஏமாற்றுவதிலிருந்து உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன், உம்முடைய பாதையில் போரிடும்போது புறமுதுகிட்டு மரணிப்பதிலிருந்து உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன், விஷப்பூச்சியின் கடியால் மரணிப்பதிலிருந்து உம்மிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 1552