Loading...
Language: Tamil
اَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِيْ، وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي، اَللَّهُمَّ وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى، وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَدُ، وأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأْلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ، فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ، اَللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ
அல்லாஹும்ம பிஇல்மிகல்ஃகைபி வ குத்ரதிக அலல்கல்கி அஹ்யினீ மா அலிம்தல்ஹயாத கைரன்லீ, வ தவஃப்பனீ இதா அலிம்தல்வஃபாத கைரன்லீ. அல்லாஹும்ம வ அஸ்அலுக கஷ்யதக ஃபில்ஃகைபி வஷ்ஷஹாததி வ அஸ்அலுக கலிமதல்ஹக்கி ஃபிர்ரிழா வல்ஃகழபி, வ அஸ்அலுகல்கஸ்த ஃபில்ஃபக்ரி வல்ஃகினா, வ அஸ்அலுக நஃஈமன் லா யன்ஃபது வ அஸ்அலுக குர்ரத அஈனின் லா தன்கதிஃ வ அஸ்அலுகர்ரிழா பஃதல்கழாஈ வ அஸ்அலுக பர்தல் ஐஷி பஃதல்மவ்தி, வ அஸ்அலுக லத்தத்தன்னழரி இலா வஜ்ஹிக வஷ்ஷவ்க இலா லிகாஈக ஃபீ ஃகைரி ழர்ராஈ முழிர்ரதின் வலா ஃபித்னதின் முழில்லதின், அல்லாஹும்ம ஸய்யின்னா பிஸீனதில்ஈமானி வஜ்அல்னா ஹுதாதம் முஹ்ததீன்
யா அல்லாஹ்! உம்முடைய மறைவான இல்மினாலும், படைப்பினங்களின் மீதுள்ள உம்முடைய வல்லமையினாலும், வாழ்வது எனக்கு நலமானது என்று நீர் அறிந்தவரை என்னை உயிரோடு வைத்திரும், மரணம் எனக்கு நலமானது என்று அறிந்தால் என்னை மரணிக்கச் செய். யா அல்லாஹ்! மறைவிலும் வெளிப்படையிலும் உமக்கு அஞ்சும் உள்ளத்தை உம்மிடம் கேட்கிறேன், மகிழ்ச்சி நேரத்திலும் கோப நேரத்திலும் உண்மையான சொல்லை கேட்கிறேன், வறுமையிலும் செல்வத்திலும் மிதமான வாழ்க்கையை கேட்கிறேன். குறையாத நிரந்தர நிம்மதியை கேட்கிறேன், தொடர்ந்து கொண்டிருக்கும் கண்ணின் குளிர்ச்சியை கேட்கிறேன், விதியின் பின்னர் திருப்தியை கேட்கிறேன், மரணத்தின் பின்னர் இலகுவான வாழ்க்கையை கேட்கிறேன். தீங்கு ஏற்படுத்தும் சோதனையோ, வழிகேட்டில் ஆழ்த்தும் ஃபித்னாவோ இல்லாத வகையில் உம்முடைய முகத்தை தரிசிக்கும் இன்பத்தையும் உம்மை சந்திக்கும் ஆர்வத்தையும் கேட்கிறேன். யா அல்லாஹ்! ஈமானின் அழகால் எம்மை அழகுபடுத்தும், எம்மை நேர்வழி காட்டுவோர்களாகவும் நேர்வழி பெற்றவர்களாகவும் ஆக்கிவிடும். அத்தா பின் அஸ்ஸாயிப் (ரஹிமஹுல்லாஹ்) தன் தந்தையிடமிருந்து அறிவித்தார்: 'அம்மார் பின் யாஸிர் (ரழியல்லாஹு அன்ஹு) எங்களுக்கு தொழுகை நடத்தினார், சுருக்கமாக நடத்தினார். சிலர் அவரிடம் கூறினார்கள்: தொழுகையை சுருக்கிவிட்டீர். அவர் கூறினார்: இருந்தாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்ட துஆக்களை படித்தேன். அவர் எழுந்து சென்றபோது, ஒரு மனிதர் அவரை பின்தொடர்ந்து அந்த துஆவைப் பற்றி கேட்டார், பிறகு வந்து மக்களிடம் (மேலே உள்ள துஆவை) தெரிவித்தார்.'
Reference: ஸஹீஹ். நஸாஈ: 1305