Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِي هُرَيْرَةَ
அல்லாஹும்மஹ்தி உம்ம அபீ ஹுரைரஹ்
யா அல்லாஹ்! அபூ ஹுரைராவின் தாயாரை நேர்வழிப்படுத்துவாயாக. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தாயாருக்காக துஆ செய்தார்கள். உடனடியாக அவரின் தாயார் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: 'என் தாயார் இணைவைப்பாளராக இருந்தார்கள். நான் இஸ்லாமை ஏற்க அவர்களுக்கு தஃவா கொடுத்தேன். ஒருநாள் தஃவா கொடுக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றி ஏதோ தவறான வார்த்தைகளை கூறினார்கள், என்னை வருத்தமடையச் செய்தது. நான் அழுதுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்று கூறினேன்: யா ரசூலல்லாஹ்! என் தாயாருக்கு தஃவா கொடுத்தேன், ஆனால் ஏற்கவில்லை. இன்று தஃவா கொடுக்கையில் (தவறான வார்த்தைகள்) கூறினார்கள். அல்லாஹ் அவர்களை நேர்வழிப்படுத்தும்படி துஆ செய்யுங்கள். பிறகு நபியவர்கள் (மேலே உள்ள துஆவை) கூறினார்கள்.'
Reference: முஸ்லிம்: 2491