Loading...
Language: Tamil
சம்பவம் இதுவாகும்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவருக்கு ஒரு ஆட்டை வாங்க ஒரு தினார் கொடுத்தார்கள். உர்வா அந்த பணத்தில் இரண்டு ஆடுகளை வாங்கினார். பிறகு ஒரு ஆட்டை ஒரு தினாருக்கு விற்று, ஒரு தினாரும் ஒரு ஆடும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொண்டுவந்தார். நபியவர்கள் அவருடைய வியாபாரத்தில் பரகத் வழங்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். உர்வா மண் வாங்கினாலும் கூட லாபம் பெறும் அளவுக்கு வெற்றி பெற்றார்.
Reference: புகாரீ: 3642