Loading...
Language: Tamil
اَللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ
அல்லாஹும்ம அலைக பி குரைஷ்
யா அல்லாஹ்! குரைஷியர்களை கையாள்வது உன்னிடம் உள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ்வின் சில எதிரிகள்மீது சாபம் கோரும் துஆ செய்தார்கள், அல்லாஹ் அதை ஏற்றான். ஒரு சம்பவம்: மக்காவில் இணைவைப்பாளர்கள் நபியவர்களுக்கு மிகவும் கஷ்டம் கொடுத்தார்கள். ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கஃபாவருகே தொழுகை நிறைவேற்றும்போது, அபூ ஜஹல் தன் தோழர்களை ஒட்டகத்தின் கருவை முஹம்மதுடைய தோள்களுக்கிடையே அவர் சஜ்தாவில் செல்லும்போது வைக்குமாறு கட்டளையிட்டான். இந்த பாதகமான குற்றத்தை உக்பா பின் அபீ முஐத் செய்தான். நபியவர்கள் தொழுகை முடித்தபிறகு, உரத்த குரலில் அவர்கள்மீது சாபம் கோரினார்கள். பிறகு மூன்று முறை (மேலே உள்ள துஆவை) கூறினார்கள்.
Reference: முஸ்லிம்: 1794