Loading...
Language: Tamil
أَمْسَيْنَا وَأَمْسَا الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا، رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ، رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ
அம்ஸைனா வ அம்ஸல் முல்கு லில்லாஹி வல் ஹம்து லில்லாஹி லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதிஹில் லைலதி வ கைர மா பஃதஹா வ அஊதுபிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதிஹில் லைலதி வ ஷர்ரி மா பஃதஹா, ரப்பி அஊதுபிக மினல் கஸலி வ ஸூவில் கிபரி, ரப்பி அஊதுபிக மின் அதாபின் ஃபின்னாரி வ அதாபின் ஃபில் கப்ரி.
நாம் மாலையை அடைந்தோம், இந்த நேரத்தில் அனைத்து ஆட்சியதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது, புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் ஒருவனே, இணையற்றவன், ஆட்சியதிகாரமும் புகழும் அவனுக்கே, அவன் அனைத்தின் மீதும் வல்லவன். என் இறைவனே! இந்த இரவின் நன்மையையும் அதற்குப் பிறகு வரும் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன், இந்த இரவின் தீமையிலிருந்தும் அதற்குப் பிறகு வரும் தீமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். என் இறைவனே! சோம்பலிலிருந்தும் தள்ளாடுதலிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். என் இறைவனே! நரக வேதனையிலிருந்தும் கப்ர் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் மேற்கண்ட துஆவை ஓதுவார்கள். காலையில் அஸ்பஹ்னா... என்று ஓதுவார்கள், மாலையில் அஸ்பஹ்னாவிற்கு பதிலாக அம்ஸைனா என்று ஓதுவார்கள்.
Reference: முஸ்லிம்: 2723