Loading...
Language: Tamil
اَللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اِهْزِمِ الْأَحْزَابَ اَللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
அல்லாஹும்ம முன்ஸிலல்-கிதாபி, ஸரீஃகல்-ஹிஸாபி, இஹ்ஸிமில்-அஹ்ஸாப, அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வ ஸல்ஸில்ஹும்.
யா அல்லாஹ்! வேதத்தை இறக்கியவனே, விரைவாக கணக்கு வாங்குபவனே, இந்தக் கூட்டணியை சிதறடி. யா அல்லாஹ்! அவர்களை தோற்கடி, அவர்களை நடுங்கச் செய். அஹ்ஸாப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் எதிர்த்து போரிட்டவர்கள் ஐந்து வகையினர்: மக்காவின் இணைவைப்பாளர்கள், அரபு பல்வேறு கோத்திரங்களின் இணைவைப்பாளர்கள், மதீனாவுக்கு வெளியிலிருந்து வந்த யூதர்கள், பனூ குரைழா மற்றும் நயவஞ்சகர்கள். அகழிக்கு முன்னால் பத்தாயிரம் காஃபிர்கள், நபியவர்களுடன் மூவாயிரம் முஸ்லிம்கள் இருந்தார்கள். காஃபிர்கள் ஒரு மாதம் நபியவர்களை சுற்றி வளைத்தார்கள். அந்த போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் (மேலே உள்ள) துஆ செய்தார்கள்.
Reference: முஸ்லிம்: 1742