Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: மக்கள் புதிய பழங்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொண்டு வருவார்கள். நபியவர்கள் அதை ஏற்று இவ்வாறு கூறுவார்கள்:
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا، وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا
அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ஸமரினா, வ பாரிக் லனா ஃபீ மதீனதினா வ பாரிக் லனா ஃபீ ஸாயினா, வ பாரிக் லனா ஃபீ முத்தினா
யா அல்லாஹ்! எங்கள் பழங்களில் பரகத் அளி, எங்கள் நகரில் பரகத் அளி, எங்கள் ஸாஈல் பரகத் அளி, எங்கள் முத்தில் பரகத் அளி.
Reference: முஸ்லிம்: 1373