Loading...
Language: Tamil
اَلْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا خَلَقَ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا خَلَقَ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ سُبْحَانَ لِلَّهِ عَدَدَ مَا خَلَقَ، وَسُبْحَانَ لِلَّهِ مِلْءَ مَا خَلَقَ، وَسُبْحَانَ لِلَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ لِلَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَسُبْحَانَ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ، وَسُبْحَانَ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ
அல்ஹம்துலில்லாஹி அதத மா கலக, வல்ஹம்துலில்லாஹி மில்ய மா கலக, வல்ஹம்துலில்லாஹி அதத மா ஃபில் அர்தி வஸ்ஸமாயி, வல்ஹம்துலில்லாஹி மில்ய மா ஃபில் அர்தி வஸ்ஸமாயி, வல்ஹம்துலில்லாஹி அதத மா அஹ்ஸா கிதாபுஹு, வல்ஹம்துலில்லாஹி அதத குல்லி ஷையின், வல்ஹம்துலில்லாஹி மில்ய குல்லி ஷையின். ஸுப்ஹானல்லாஹி அதத மா கலக, வ ஸுப்ஹானல்லாஹி மில்ய மா கலக, வ ஸுப்ஹானல்லாஹி அதத மா ஃபில் அர்தி வஸ்ஸமாயி, வ ஸுப்ஹானல்லாஹி மில்ய மா ஃபில் அர்தி வஸ்ஸமாயி, வ ஸுப்ஹானல்லாஹி அதத மா அஹ்ஸா கிதாபுஹு, வ ஸுப்ஹானல்லாஹி அதத குல்லி ஷையின், வ ஸுப்ஹானல்லாஹி மில்ய குல்லி ஷையின்.
அல்லாஹ்வின் படைப்பின் எண்ணிக்கைக்கு இணையான புகழ் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வின் படைப்பு நிரம்பியதற்கு இணையான புகழ் அல்லாஹ்வுக்கே. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் எண்ணிக்கைக்கு இணையான புகழ் அல்லாஹ்வுக்கே. வானங்களிலும் பூமியிலும் நிரம்பியதற்கு இணையான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனுடைய வேதம் கணக்கிட்டதின் எண்ணிக்கைக்கு இணையான புகழ் அல்லாஹ்வுக்கே. எல்லாவற்றின் எண்ணிக்கைக்கு இணையான புகழ் அல்லாஹ்வுக்கே. எல்லாவற்றிலும் நிரம்பும் புகழ் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வின் படைப்பின் எண்ணிக்கைக்கு இணையாக அல்லாஹ்வை தஸ்பீஹ் சொல்கிறேன். அல்லாஹ்வின் படைப்பு நிரம்பியதற்கு இணையாக தஸ்பீஹ் சொல்கிறேன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் எண்ணிக்கைக்கு இணையாக தஸ்பீஹ் சொல்கிறேன். வேதம் கணக்கிட்டதின் எண்ணிக்கைக்கு இணையாக தஸ்பீஹ் சொல்கிறேன். எல்லாவற்றின் எண்ணிக்கைக்கு இணையாகவும் எல்லாவற்றிலும் நிரம்பும் வகையிலும் அல்லாஹ்வை தஸ்பீஹ் சொல்கிறேன். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அபூ உமாமா பாஹிலீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கூறினார்கள்: 'நாள் இரவு முழுதும் (நஃபில்) திக்ரை விட சிறந்த ஒரு துஆ/திக்ரை நான் உங்களுக்கு கற்பிக்கட்டுமா? இந்த துஆ/திக்ரை நீங்களும் கற்றுக்கொண்டு உங்களுக்கு பிறகு வருபவர்களுக்கும் கற்பியுங்கள்.'
Reference: ஸஹீஹ் (அல்பானி). ஸஹீஹுல் ஜாமி: 2615