Loading...
Language: Tamil
جَزَاكَ اللَّهُ خَيْرًا
ஜஸாகல்லாஹு கைரன்
அல்லாஹ் உங்களுக்கு நன்மையான பிரதிபலன் அளிக்கட்டும். [1] முஃமின் தனக்கு நன்மை செய்தவரிடமிருந்து நன்றியோ பிரதிபலனோ எதிர்பார்க்கமாட்டான். மறுபுறம் நன்மை செய்யப்பட்ட முஃமினுக்கு கடமை: நன்மை செய்தவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், அவரை புகழ வேண்டும், அவருடைய நன்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும், அவருக்காக துஆ செய்ய வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: யாரேனும் ஒருவருக்கு நன்மை செய்தால் அவர் இதை கூறி நன்றி தெரிவிக்கட்டும், அது மிக சிறந்த பாராட்டாக இருக்கும். [2]
Reference: [1] புகாரீ: 336 [2] ஸஹீஹ். திர்மிதீ: 2035