Loading...
Language: Tamil
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ اَللَّهُمَّ إِنَّ هَذَا مِنْكَ وَلَكَ اَللَّهُمَّ تَقَبَّلْ مِنِّي
பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர், அல்லாஹும்ம இன்ன ஹாதா மின்க வலக, அல்லாஹும்ம தகப்பல் மின்னீ.
அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன். அல்லாஹு அக்பர். யா அல்லாஹ்! இது உன்னிடமிருந்து உனக்காகவே. யா அல்லாஹ்! என்னிடமிருந்து ஏற்றுக்கொள். குடும்பத்தினர் சார்பில் அறுக்கும்போது 'தகப்பல் மின்னீ' க்கு பிறகு 'வமின் அஹ்லி பைதீ' சேர்க்கவேண்டும். வேறொருவர் சார்பிலோ அல்லது அகீகா மிருகமாக இருந்தாலோ 'தகப்பல் மின்' க்கு பிறகு அந்த நபர் அல்லது குழந்தையின் பெயர் சொல்லவேண்டும். இது தொடர்பாக கூடுதல் ஏதேனும் ஆதாரப்பூர்வமான துஆ இல்லை என்பது தெளிவு.
Reference: இர்வாவுல் ஃகலீல்: 1118