Loading...
Language: Tamil
காலையில் (மாலையில்) கூறுங்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِيْ وَدُنْيَايَ وَأَهْلِيْ، وَمَالِيْ، اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ، وَآمِنْ رَوْعَاتِيْ، اَللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِيْنِيْ وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِيْ وَأَعُوْذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல்-அஃப்வ வல்ஆஃபியத ஃபித்-துன்யா வல்ஆகிரஹ், அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல்-அஃப்வ வல்ஆஃபியத ஃபீ தீனீ வ துன்யாய வ அஹ்லீ வ மாலீ, அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ வ ஆமின் ரவ்ஆதீ, அல்லாஹும்மஹ்ஃபழ்னீ மின் பைனி யதைய்ய வ மின் கல்ஃபீ வ அன் யமீனீ வ அன் ஷிமாலீ வ மின் ஃபவ்கீ வ அஊதுபி-அழமதிக அன் உஃக்தால மின் தஹ்தீ.
யா அல்லாஹ்! இந்த உலகிலும் மறுமையிலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் வேண்டுகிறேன். யா அல்லாஹ்! என்னுடைய மார்க்கத்திலும் உலக விஷயங்களிலும் குடும்பத்திலும் செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் வேண்டுகிறேன். யா அல்லாஹ்! என்னுடைய குறைகளை மறை, என்னுடைய அச்சங்களை அமைதிப்படுத்து. யா அல்லாஹ்! என்னை முன்னால் இருந்தும் பின்னால் இருந்தும், என் வலப்பக்கத்திலிருந்தும் இடப்பக்கத்திலிருந்தும், மேலேயிருந்தும் காப்பாற்று. கீழிலிருந்து திடீரென விழுங்கப்படுவதிலிருந்து உன்னுடைய மேன்மையில் பாதுகாப்பை நாடுகிறேன். அப்துல்லாஹ் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காலையிலும் மாலையிலும் இந்த துஆக்களை கூறாமல் விடுவதில்லை.
Reference: ஸஹீஹ். அபூ தாவூத்: 5074